எட்டு வழிச்சாலை அமைக்கப்பட்டால் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த லட்சக்கணக்கான விவசாயத் தொழிலாளர்கள் பாதிக்கப்படும் சூழல் ஏற்படும்''
எட்டு வழிச்சாலை அமைக்கப்பட்டால் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த லட்சக்கணக்கான விவசாயத் தொழிலாளர்கள் பாதிக்கப்படும் சூழல் ஏற்படும்'' என்று அகில இந்திய விவசாயச் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் பி.சண்முகம் கூறினார்.
அகில இந்திய விவசாயச் சங்கத்தின் அகில இந்திய சிறப்பு மாநாடு அடுத்த மாதம் நடைபெறுவதையொட்டி அதற்கான ஏற்பாடுகளுக்காக விருதுநகர் வருகை தந்த அகில இந்திய விவசாயச் சங்கத்தின் மாநிலச் பொதுச் செயலாளர் பி.சண்முகம் செய்தியாளர்களிடம் பேசும்போது,
அகில இந்திய விவசாயச் சங்கத்தின் அகில இந்திய சிறப்பு மாநாடு அடுத்த மாதம் 18, 19, 20 ஆகிய தேதிகளில் விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் நடைபெற உள்ளது. வளர்ச்சித் திட்டம் என்ற பெயரில் நாடு முழுவதும் விவசாயிகளின் விளைநிலங்கள் மத்திய மாநில அரசுகளால் அபகரிக்கப்பட்டு வருகிறது. சென்னை - சேலம் இடையே எட்டு வழி அதி விரைவு பசுமை சாலை அமைக்க 10,000 ஏக்கர் நிலம் பயன்படுத்தப்பட உள்ளது. அதில் 6,000 ஏக்கர் நிலம், தற்போது விவசாயச் செய்துகொண்டிருக்கும் நிலம் ஆகும். எட்டு வழிச்சாலை அமைக்கப்பட்டால் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த லட்சக்கணக்கான விவசாயத் தொழிலாளர்கள் பாதிக்கப்படும் சூழல் ஏற்படும். எனவே, தமிழக அரசு இந்தத் திட்டத்தைக் கைவிட வேண்டும்'' என்றார்.
எட்டு வழிச்சாலை அமைக்கப்பட்டால் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த லட்சக்கணக்கான விவசாயத் தொழிலாளர்கள் பாதிக்கப்படும் சூழல் ஏற்படும்''
Reviewed by Tamilnadu At One Stop
on
June 19, 2018
Rating:
No comments: