செயின்ட் பீட்டர்ஸ்பர்க்: உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் எகிப்துடன் மோதிய ரஷ்யா 3-1 என்ற கணக்கில் எகிப்தை வென்று இரண்டாவது வெற்றியை ருசித்தது.
ரஷ்யாவில் 21-வது உலக கோப்பை கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது. குரூப் 'ஏ' பிரிவில், ரஷ்யா மற்றும் எகிப்து அணிகள் மோதிய ஆட்டம் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் மைதானத்தில் நடைபெற்றது.
எகிப்து தனது முதல் போட்டியில் உருகுவே அணியிடம் தோல்வியுற்றிருந்ததால், இந்த போட்டியில் ரஷ்யாவிற்கு கடும் நெருக்கடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அதேசமயம், முதல் போட்டியில், 5-0 என்ற கோல் கணக்கில் சவுதி அரேபியாவை வீழ்த்தியிருந்த ரஷ்ய அணி, புதிய உத்வேகத்துடன் களமிறங்கியது.
விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தின் முதல்பாதி கோல் எதுவுமின்றி முடிந்தது. இரண்டாம் பாதி ஆட்டத்தில் 47-வது நிமிடத்தில், ரஷ்ய வீரர் அடித்தப் பந்தை அஹமத் ஃபாதி தடுக்க முயற்சித்தபோது, பந்து அவரின் காலில் பட்டு சேம் சைடு கோல் ஆனது. இதனால் ரஷ்யா அணி 1-0 என முன்னிலை பெற்றது. தொடர்ந்து, ரஷ்யாவின் டென்னிஸ் செரிசேவ் மற்றும் டிசியூபா அடுத்தடுத்து கோல் அடிக்க 3-0 என்ற புள்ளிக் கணக்கில் முன்னிலை பெற்றது.
ஆட்டத்தின் 73-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பில், எகிப்து வீரர் முகமது சலா கோல் அடித்தார். இதன் பின்னர் அந்த அணியினர் எந்த கோலும் அடிக்கவில்லை. இறுதியில், ரஷ்ய அணி 3-1 என்ற கணக்கில் எகிப்தை வென்று இரண்டாவது வெற்றியை ருசித்தது. இட்ன்ஹா வெற்றியின் மூலம், குரூப் 'ஏ' பிரிவில் 6 புள்ளிகளுடன் முதலிடத்தை ரஷ்ய அணி தக்கவைத்துக் கொண்டது. விளையாடிய இரு போட்டிகளிலும் தோல்வியுற்றதால், அடுத்த சுற்றுக்கு தகுதிபெறும் வாய்ப்பை எகிப்து அணி இழந்தது.
ரஷ்யாவுக்கு இரண்டாவது வெற்றி
Reviewed by Tamilnadu At One Stop
on
June 20, 2018
Rating:
No comments: