Breakiing News Pakistan Terrorism | India | Tamilnadu | Politics | Films | Sports | Education | Terrorism and Know More | NEWS PACKAGE
Kindly Translate to English If you are not comfortable with Tamil
மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்குவதில் தமிழகம் முன்னிலை :
Check out your favourite Best Selling Product in Amazon in One Click
Check out your favourite Best Selling Product in Amazon in One Click
அண்ணா பல்கலை. விழாவில் முதல்வர் பழனிசாமி உரை*
*மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்குவதில் தமிழகம் முன்னிலை வகிக்கிறது என்று சென்னை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார். இந்தியாவில் உயர்கல்வியில் சிறந்து விளங்கும் மாநிலமாக தமிழகம் திகழ்கிறது என்று கூறினார்*
*மேலும் அவர் கூறுகையில்; புத்தகங்களை தூக்க வேண்டிய கைகளில் மாணவர்கள் ஆயுதங்களை தூக்கி செல்வது வருத்தமளிக்கிறது என்று கூறினார்*
*வன்முறைகளை மாணவர்கள் தவிர்க்க வேண்டும், அதற்கு பெற்றோர்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் என்று தெரிவித்தார்*
*சென்னை பல்கலைக்கழகத்தில் எம்ஜிஆர் நூற்றாண்டு சமூக வளர்ச்சி ஆய்வு மையம் ரூ.5 கோடியில் நிறுவப்படும் என்று தெரிவித்தார்*
*மேலும் இணைய தடயவியல் மற்றும் தகவல் பாதுகாப்பு மையம் தமிழ்நாடு அரசு உதவியுடன் அமைக்கப்படும் என்று பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்*
அழகிரி அறிக்கை
தலைவர் கலைஞரின் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே!
நான் தலைவன் அல்ல.
ஒரு மேடை பேச்சாளன் அல்ல.
ஒரு நடிகன் அல்ல.
தனி மனிதனாய் தொண்டனாகிய என் வேண்டுகோளை ஏற்று என் தந்தை தலைவர் கலைஞர் அவர்களின் 30வது நாள் பேரணிக்கு அஞ்சலி செலுத்த என் மீது பாசம் கொண்டு அலைகடலென வருகை தந்த அணைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியை தங்களின் பாதங்களில் காணிக்கையாக்குகிறேன்.
நான் தலைவன் அல்ல.
ஒரு மேடை பேச்சாளன் அல்ல.
ஒரு நடிகன் அல்ல.
தனி மனிதனாய் தொண்டனாகிய என் வேண்டுகோளை ஏற்று என் தந்தை தலைவர் கலைஞர் அவர்களின் 30வது நாள் பேரணிக்கு அஞ்சலி செலுத்த என் மீது பாசம் கொண்டு அலைகடலென வருகை தந்த அணைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியை தங்களின் பாதங்களில் காணிக்கையாக்குகிறேன்.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் 165 வது படத்தின் பெயர் பேட்ட
Best Selling Video Games in Amazon App
Best Selling Video Games in Amazon App
சென்னை : சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்திற்கு பெயர் பேட்ட என்று வைத்துள்ளனர். மேலும் படத்தலைப்பு தொடர்பான மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் ரஜினியுடன் த்ரிஷா , விஜய் சேதுபதி, சிம்ரன், நவாசுதீன் சித்திக், பாபி சிம்ஹா, சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ், குரு சோமசுந்தரம் ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர்.
அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்திற்கு திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்கிறார்.
அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்திற்கு திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்கிறார்.
வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளை உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆய்வு
லக்னோ : உன்னோ, கான்பூர், பகுதிகளில் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளின் நிலைமைகளை உத்தரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு மேற்கொண்டார். முன்னதாக கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை பெய்த கனமழைக்கு 16 பேர் பலியாகினர். இந்நிலையில் கனமழையால் பலி எண்ணிக்கை 44-ஆக அதிகரித்துள்ளது. மேலும் 18 பேர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மழையால் ஷாஜகான்பூர் , அமேதி, ரேபரேலி ஆகிய பகுதியில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதுகுறிப்பிடத்தக்கது .
கேரளாவில் மழை குறைந்ததையடுத்து இடுக்கி அணையில் நீர்திறப்பு முற்றிலுமாக நிறுத்தம்
திருவனந்தபுரம் : இடுக்கி அணையில் நீர்திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது. கனமழையால் 26 ஆண்டுகளுக்கு பின் கடந்த மாதம் திறக்கப்பட்ட நிலையில், மழை குறைந்தால் அணையில் இருந்து நீர் திறப்பு முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.
டெல்லி செங்கோட்டை அருகே 2 தீவிரவாதிகள் கைது
டெல்லி : டெல்லி செங்கோட்டை அருகே 2 தீவிரவாதிகளை காவல்துறை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட 2 பேரிடம் இருந்து 2 கைத்துப்பாக்கி மற்றும் குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. காஷ்மீருக்குச் சென்று சதிச் செயல்களில் ஈடுபட இருந்த 2 தீவிரவாதிகள் போலீசில் பிடிபட்டனர்.
பல்வேறு மாவட்டங்களில் நடந்தவை
சேலம் கெங்கவல்லி அருகே கிணற்றில் தவறி விழுந்து 11 வயது சிறுவன் உத்தரபாரதி உயிரிழந்தார். கிணறு அருகே விளையாடி கொண்டிருந்தபோது சிறுவன் தவறி விழுந்தான். உடலை மீட்டு போலீசார் விசாணை நடத்தி வருகின்றனர்.
சென்னை போரூர் மேம்பாலத்தில் நின்று கொண்டிருந்த லாரி மீது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தாய் ஜமுனா மற்றும் மகன் காமேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மம்சாபுரத்தில் 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் கைது செய்யப்பட்டார். பரமன்(75) வயது முதியவர் மீது போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்தனர்.
திண்டுக்கல் பட்டிவீரன்பட்டியில் பள்ளி மாணவர்கள் சென்ற ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கந்தவேல், தங்கபாண்டி ஆகிய மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். இதனையடுத்து அவர்கள் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திருவாரூர் பொதுமக்களின் எதிர்ப்பை மீறி விளைநிலங்கள் வழியாக ஐஓசி நிறுவனம் எண்ணெய் குழாய் பதிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மூங்கில்குடி, ஒமக்குளம், முலாங்குடி உள்ளிட்ட 10 கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னையில் ஐ.சி.எப் ரயில்பெட்டி தொழிற்சாலையில் உயரதிகாரிகளிடம் தகராறு செய்த ஊழியர்கள் 45 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சிவசுப்பிரமணியன் உள்ளிட்ட 4 பேர் பணியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளனர்.
மதுரை அருகே வாடிப்பட்டியில் மலைகளை சுற்றிலும் இயங்கும் கல்குவாரிகளுக்கு இடைக்காலத் தடை
மதுரை : வாடிப்பட்டி தாலுகாவில் உள்ள பெருமாள் மலைகளை சுற்றிலும் இயங்கும் கல்குவாரிகளுக்கு இடைக்காலத் தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது கல்குவாரி நடத்த உரிமம் பெற்ற தனியார் நிறுவனங்கள் மலைப்பகுதிகளை சுற்றியுள்ள காடுகளை அழிப்பதாக மனுதாரர் குறிப்பிட்டிருந்தார்.
குட்கா வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை தேவை : பொன் ராதாகிருஷ்ணன் பேட்டி
சென்னை : குட்கா வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை தேவை என்று மத்திய இணையமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் பேட்டி அளித்துள்ளார். நாகர்கோவில் அருகே முக்கடல் அணையை பார்வையிட்ட பின் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் பேட்டி அளித்தார்.அப்போது, நீண்ட காலமாக நிலுவையில் இருக்கும் வழக்கின் விசாரணை நியாயமாக நடக்க வேண்டும் என்று கூறிய அவர், மத்திய அரசு மட்டுமே நினைத்து பெட்ரோல், டீசல் விலையேற்றத்தை குறைக்க முடியாது என்றும் மாநில அரசும் குறைக்க முடியும், நாட்டின் வளர்ச்சி திட்டங்களை கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.
கன்னியாகுமரியின் தலையணையான புத்தன் அணையில் சிமெண்ட் பூச்சு உடைந்து சேதம்
கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டத்தில் தலையணையான புத்தன் அணையில் சிமெண்ட் பூச்சு உடைந்து சேதமடைந்துள்ளது. கடந்த மாதம் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின்போது அதிகளவு நீர் சூழ்ந்ததால் சேதமடைந்தாக கூறப்படுகிறது. ஒரு மாதத்திற்கு முன்னரே சேதமடைந்த நிலையில், பொதுப்பணித்துறை அதிகாரிகள் மெத்தனாக செயல்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
412 பயிற்சி மையங்களில் நீட் தேர்வு பயிற்சி தொடக்கம்
சென்னை : தமிழகத்தில் அமைக்கப்பட்ட 412 பயிற்சி மையங்களில் நீட் தேர்வு பயிற்சி தொடங்கப்பட்டது. நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரம் அரசு பள்ளியில் நீட் பயிற்சி மையத்தை அமைச்சர் செங்கோட்டையன் திறந்துவைத்தார்.
புதுக்கோட்டையில் பத்திரப்பதிவுத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை திடீர் சோதனை
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் பத்திரப்பதிவு துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். 10 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் குழு 3 மணி முதல் சோதனை நடத்தி வருகிறது.
கல்லணையில் மூழ்கி சென்னை இளைஞர் உயிரிழப்பு
தஞ்சை : சென்னை வியாசர்பாடியை சேர்ந்த கல்லூரி மாணவர் ஆனஸ்ட்ராஜ் கல்லணையில் மூழ்கி உயிரிழந்துள்ளார். கல்லணையில் ஆழமான பகுதியில் மாட்டிக்கொண்ட மாணவர் ஆனஸ்ட்ராஜ் நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொல்லிமலையில் ரூ.270 கோடி மதிப்பீட்டில் புதிய நீர்மின் நிலையம் அமைக்கப்படும் : அமைச்சர் தங்கமணி
சென்னை : கொல்லிமலையில் 20 மெகாவாட் உற்பத்தி செய்யக்கூடிய புதிய நீர்மின் நிலையம் அமைக்கப்படும் என்று அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார். ரூ.270 கோடி மதிப்பீட்டில் 10 நாட்களுக்குள் திட்டம் தொடங்கப்படும் என்றும், 4 ஆண்டுகளில் தமிழ்நாடு மின்சார வாரியமே 4 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தயாரிக்க உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.
திருச்சி முக்கொம்பு அணையில் தடுப்புகள் அமைக்கும் பணிகள் நிறைவு : அமைச்சர் விஜயபாஸ்கர்
திருச்சி : திருச்சி முக்கொம்பு அணையில் தடுப்புகள் அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். 3.5 லட்சம் மணல் மூட்டைகள், 700 லாரிகளில் பாராங்கற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்று அவர் கூறியுள்ளார். மேலும் ஓய்வுபெற்ற மூத்த அதிகாரிகளை கொண்ட குழு தொடர்ந்து அணையை கண்காணிக்கும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர்தெரிவித்தார்.
தி.மலையில் அமைச்சர் வர தாமதமாவதால் 3 மணி நேரம் மாணவர்கள் காத்திருப்பு
திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டம் உக்கல் கிராமத்தில் அமைச்சர் வர தாமதமாவதால் மாணவர்கள் காத்திருக்கின்றனர். உக்கல் கிராம உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டதால் அரசு நிகழ்ச்சி நடைபெறுகிறது. அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வருகைக்காக 3 மணி நேரம் மாணவர்களை காத்திருக்க வைத்துள்ளதாக புகார் எழுந்தது.
செப்.10ல் நடைபெறும் நாடு தழுவிய போராட்டத்துக்கு டிப்பர் லாரி உரிமையாளர்கள் ஆதரவு
டெல்லி : காங்கிரஸ் சார்பில் செப்.10ல் நடைபெறும் நாடு தழுவிய போராட்டத்துக்கு டிப்பர் லாரி உரிமையாளர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நடைபெறும் போராட்டத்திற்கு ஆதரவு என அவர்கள் அறிவித்துள்ளனர். முன்னதாக பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து வரும் 10ம் தேதி பெட்ரோல் நிலையங்கள் முன்பாக நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்திற்கு காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ளது. இப்போராட்டத்தில் கலந்துக் கொள்ளுமாறு கூட்டணி மற்றும் தோழமைக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
டெல்லியில் கைதான பயங்கரவாதிகள் 2 பேருக்கு 5 நாள் போலீஸ் காவல்
டெல்லி : டெல்லியில் கைதான பயங்கரவாதிகள் பர்வேஸ், ஜம்ஷத் ஆகியோருக்கு 5 நாள் போலீஸ் காவல் விதிக்கப்பட்டுள்ளது. 2 பயங்கரவாதிகளையும் காவலில் எடுத்து விசாரிக்க டெல்லி சிறப்புப்படை போலீசுக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.முன்னதாக டெல்லி செங்கோட்டை அருகே 2 தீவிரவாதிகளை காவல்துறை கைது செய்து விசாரணை நடத்தினர். கைது செய்யப்பட்ட 2 பேரிடம் இருந்து 2 கைத்துப்பாக்கி மற்றும் குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. காஷ்மீருக்குச் சென்று சதிச் செயல்களில் ஈடுபட இருந்த 2 தீவிரவாதிகள் போலீசில் பிடிப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக அமைச்சரவை கூட்டம் நாளை மறுநாள் நடைபெறுகிறது_*
சென்னை : தமிழக அமைச்சரவை கூட்டம் நாளை மறுநாள் நடைபெறுகிறது. பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுவிப்பது குறித்து தீர்மானம் நிறைவேற்றபபடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. 7 பேரை விடுவிக்க மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளதாக உச்சநீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியதை அடுத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கூட்டம் நடைபெறுகிறது. அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி அனுப்பினால் ஆளுநர் அனுமதி அளிப்பார். சிபிஐ சோதனைக்கு உள்ளன சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் பிரச்சனை குறித்தும் விவாதிக்கக் கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
திரையரங்குகளில் உணவுப் பொருட்களை கூடுதல் விலைக்கு விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் : தொழிலாளர்துறை எச்சரிக்கை
சென்னை : திரையரங்குகளில் உணவுப் பொருட்களை கூடுதல் விலைக்கு விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு தொழிலாளர்துறை திரையரங்குகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகம் முழுவதும் கடந்த 2 நாட்களில் 335 திரையரங்குகளில் உதவி ஆணையர்கள் சோதனை நடத்தினர். ஆய்வு செய்ததில், 72 இடங்களில் கூடுதல் விலைக்கு உணவுப் பொருட்களை விற்றது தெரியவந்தது.கூடுதல் விலைக்கு விற்றது, தேதியில்லாமை போன்றவற்றிற்காக 114 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. TN-LMCTS என்ற மொபைல் ஆப் மூலம் ரசிகர்கள் புகார் அளிக்கலாம் என்றும் தொழில்துறை தெரிவித்துள்ளது.
ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரும் விடுதலை செய்யக் கோரி புதிதாக மனு
சென்னை :ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரும் விடுதலை செய்யக் கோரி புதிதாக மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர். தமிழக அரசுக்கு பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரும் புதிதாக மனு அளித்தனர். வேலூர் சிறைக்கு வந்த வழக்கறிஞர் புகழேந்தியிடம் 7 பேரும் மனுவை வழங்கினர்.
மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிப்பு
சேலம்: மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு 12000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 6000 கன அடியில் இருந்து 12000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. டெல்டா பாசனத்துக்கு அதிக தேவைப்படுவதால் நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
பாஜகவிற்கு எதிராக முழக்கமிட்ட மாணவி சோபியாவின் பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்ய முயற்சி: ஸ்டாலின் கண்டனம்
சென்னை: பாஜகவிற்கு எதிராக முழக்கமிட்ட மாணவி சோபியாவின் பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்ய முயற்சிப்பதற்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். பொதுவாழ்வில் விமர்சனங்கள் ஆரோக்கியமானவை என்பதை உணர்ந்து தமிழிசை அவர்கள் புகாரை வாபஸ் பெற வேண்டும் என்று ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
தனியார் பால் நிறுவனங்களில் பால்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்யலாம்: தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை: தனியார் பால் நிறுவனங்களில் பால்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்யலாம் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தரமான பாலை வழங்குவது அரசின் கடமை என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.பாலின் தரத்தை அரசு அங்கீகாரம் பெற்ற சோதனை மையங்களில் ஆய்வு செய்யலாம் என்று தெரிவித்துள்ளது.
பாஸ்போர்ட்டுடன் காவல் நிலையத்தில் சோபியா தந்தை ஆஜர்
தூத்துக்குடி: தூத்துக்குடி அடுத்த புதுக்கோட்டை காவல் நிலையத்தில் சோபியா தந்தை ஆஜரானார். சோபியா தந்தை சாமியுடன் வழக்கறிஞர்கள் இருவரும் காவல் நிலையம் வந்துள்ளனர். சோபியா பாஸ்போர்ட்டுடன் வருமாறு போலீஸ் சம்மன் அனுப்பியிருந்தது.
கிருஷ்ணகிரி மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் கைது
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் நரசிம்மன் கைது செய்யப்பட்டுள்ளார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைக்கு சொந்தமான கட்டிடத்தில் கடை வழங்க லஜம் பெற்றதாக புகார் தெரிவிக்கப்பட்டது. ஜெயக்குமார் என்பவரிடம் ரூ.15000 பெற்றுக்கொண்டு நரசிம்மன் கடை வழங்கியதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஏழை மாணவர்களின் கல்வி கனவு நிறைவேற வங்கிகள் கல்விக்கடன் வழங்க வேண்டும்: உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
மதுரை: ஏழை மாணவர்களின் கல்வி கனவு நிறைவேற வங்கிகள் கல்விக்கடன் வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. கல்வி கடன் வழங்குவதில் வங்கிகள் தாராள மனதுடன் செயல்படவேண்டும் என்று தெரிவித்துள்ளது. தற்போது கல்வி வியாபாரமாகிவிட்டது. கல்விக்காக அதிக செலவிட வேண்டியுள்ளது என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.
Breakiing News Pakistan Terrorism | India | Tamilnadu | Politics | Films | Sports | Education | Terrorism and Know More | NEWS PACKAGE
Reviewed by Tamilnadu At One Stop
on
September 08, 2018
Rating:
No comments: