டெல்லியில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் தொடக்கம்_*
டெல்லி: டெல்லியில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் தொடங்கியது. பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித்ஷா, அத்வானி, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தல்கள் உள்ளிட்டவை குறித்து செயற்குழு கூட்டத்தில் ஆலோசனை நடத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது.
நேர்மையான அதிகாரிகள் அரசாங்கத்திற்கு தேவையில்லை என்கிற நிலை நிலவுகிறது*_
_*கோவையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின்னர் கர்நாடக போக்குவரத்து துறை ஐஜி ரூபா செய்தியாளர்களுக்கு பேட்டி*_
பெட்ரோல் விலையை மத்திய அரசே நிர்ணயிக்க வலியுறுத்தி தீர்மானம் : திருநாவுக்கரசர் பேட்டி
சென்னை: மக்கள் பணத்தை சுரண்டி மத்திய அரசு பயனடைந்துள்ளது என்று சென்னையில் அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு பின் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் குற்றம்சாட்டியுள்ளார். எந்த நாட்டிலும் இல்லாத அளவு இந்தியாவில் பெட்ரோல் விலை அதிகரித்து வருகிறது. பெட்ரோல் விலையை மத்திய அரசே நிர்ணயிக்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி வரிவிதிப்புக்குள் பெட்ரோல் விலையை கொண்டு வர வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்துவது இந்தியாவின் கையில் இல்லை : அமைச்சர் தர்மேந்திர பிரதான்
*பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்துவது இந்தியாவின் கையில் இல்லை என மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார். கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள், உற்பத்தியை குறைக்கும் போது விலையேற்றத்தை கட்டுப்படுத்த முடியாது.*
*✍பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நடைபெறும் முழு அடைப்புக்கு மத்திய தொழிற்சங்கங்கள் ஆதரவு*
*✍பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நடைபெறும் முழு அடைப்புக்கு மத்திய தொழிற்சங்கங்கள் ஆதரவு*
இந்துமதி தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான 9 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை
சென்னை: இந்துமதி தனியார் நிறுவன உரிமையாளர் செண்பகனுக்கு சொந்தமான 9 இடங்களில் அமலாக்கத்துறை சோதனையில் ஈடுபட்டுள்ளது. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை புகாரில் விருதுநகர், மதுரை, கோவை, சென்னை உட்பட 9 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றனர். வங்கியில் போலி ஆவணங்களை காட்டி கடன் பெற்று மோசடி செய்திருப்பதாக இந்துமதி குழுமம் மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை அண்ணாநகரில் உள்ள பிரபல நகைக்கடையில் 57 சவரன் நகையை மர்ம நபர்கள் கொள்ளை.
பணிக்கு சேர்ந்த 9 நாட்களில் முகமது ரபீக் என்பவர் கைவரிசை காட்டியது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.
சென்னை* திருவேற்காட்டில் ஆட்டோ கன்சல்டன்சி உரிமையாளர் கடத்தப்பட்ட வழக்கில் 3 பேர் கைது
சென்னை மயிலாப்பூரில் டி.என்.பி.எஸ்.இ குரூப் 2 தேர்வுக்கான பயிற்சி வகுப்பு நாளை தொடங்குகிறது*
மயிலாப்பூரில் உள்ள ஒய்.எம்.ஏ அகாடமியில் நாளை இதற்கான நேர்முகத்தேர்வு நடைபெறுகிறது*
______________________________ __
______________________________ __
ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் கலாணி என்பவருக்கு ஒரே பிரசவத்தில் 2 ஆண் 2 பெண் என 4 குழந்தைகள் பிறந்துள்ளது*_
______________________________ __
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் இடைத்தரகர்களாக செயல்பட்ட 3 பேர் கைது_*
தி.மலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் இடைத்தரகர்களாக செயல்பட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாவட்ட நீதிபதி மகிழேந்தி ஆய்வு செய்த போது பக்தர்கள் அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 12 இடைத்தரகர்கள் பக்தர்களிடம் பணம் பெற்றுக் கொண்டு தரிசனத்துக்கு அழைத்து செல்வதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. 12 இடைத்தரகர்களில் அன்பு, அண்ணாமலை, செல்வம் என்ற 3 இடைத்தரகர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
______________________________ __
ஒட்டன்சத்திரம் அருகே கொல்லப்பட்டியில் கந்துவட்டி கொடுமையால் விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார். பூச்சி மருந்து குடித்து மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட காளிமுத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
______________________________ __
முக்கொம்பு மேலணையில் தற்காலிக பாலத்தில் இருந்து கசிவடையும் நீரை தடுக்கும் பணிகள் தொடங்கியுள்ளது. மணல் உள்ளிட்டவைகளை கொண்டு தற்காலிக பாலத்தின் நீர் கசிவை அடைத்து வருகின்றனர்.
______________________________ __
______________________________ __
______________________________ __
______________________________ __
விருதுநகர் : சிவகாசி காக்கிவாடன்பட்டி யில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது*_
______________________________ __
7 பேர் விடுதலை தொடர்பான விவகாரத்தில் தமிழக அரசு முடிவு எடுக்கலாம் என உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் நகல் வெளியிடப்பட்டது*_
ஆபத்தைப் பற்றிக் கவலைப்படாமல் சிறையில் நடந்ததை வெளிப்படுத்தினேன் -ஐ.பி.எஸ். அதிகாரி ரூபா பேட்டி
*ஆபத்து ஏற்படும் என பலர் எச்சரித்தும் அதைப் பற்றிக் கவலைப்படாமல் பரப்பன அக்ரஹார சிறையில் நடந்ததை வெளிப்படுத்தியதாக கர்நாடக மாநில ஊர்க்காவல்படை ஐ.ஜி. ரூபா தெரிவித்துள்ளார்.*
*கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஊழல் எதிர்ப்பு இயக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பரப்பன அக்ரஹார சிறை விவகாரம் தொடர்பாக தனக்கு நேரடியாக எந்த மிரட்டலும் இல்லை என்று கூறினார்.*
*தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பாக விண்ணப்பம் கொடுத்தால் வேண்டுமென்றே தாமதபடுத்தப்படுத்தப்படுவதாகவு ம் பதில் சொல்வதில் வெளிப்படைத் தன்மை இல்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்*
*குட்கா விவகாரத்தில் தாம் நேர்மையாக பணிபுரிந்து உள்ளதாக, சென்னை மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையராக இருந்து தற்போது விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருக்கும் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.*
*நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த சென்னை மாநகர முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ், பணம் பெற்றுக் கொண்டு சட்டவிரோதமாக குட்கா விற்பனை நடந்திருப்பதை ஒப்புக் கொண்டார். மேலும் சென்னை மத்திய குற்றப்பிரிவில் துணை ஆணையராக இருந்த ஜெயக்குமார், சட்டவிரோத குட்கா விற்பனை குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்காமல் மறைத்துவிட்டதாகவும் ஜார்ஜ் கூறினார். இந்நிலையில், தற்போது விழுப்புரம் எஸ்.பி.யாக பணிபுரிந்து வரும் ஜெயக்குமார் , முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் கூறிய குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்*
*காவல்துறை பணியில் இல்லாத ஜார்ஜ் தற்போது எதை வேண்டுமானாலும் கூறலாம் என்றாலும், தாம் தற்போது காவல்துறை பணியில் இருப்பதால் எதையும் கூற முடியாது என்று தெரிவித்தார். மேலும், தற்போது வரை தாம் நேர்மையாக பணியாற்றி வருவதாகவும் ஜெயக்குமார் விளக்கம் அளித்தார். ஜெயக்குமார் தற்போது பயன்படுத்தி வரும் செல்போனில், உண்மையை பின்பற்றுங்கள், யாரிடமும் பயப்பட தேவையில்லை என்ற படத்தை வாட்ஸ் ஆப் டிஸ்ப்ளே பிக்சராக வைத்துள்ளார்*
*🔹🔸சென்னை விருகம்பாக்கத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டினால் ஏற்படும் தீமைகளை எடுத்துரைக்கும் பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்ற விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.*
*🔹🔸200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திய படி இந்தப் பேரணியில் பங்கேற்றனர்.*
*🔹🔸பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக மறுசுழற்சி செய்யப்படும் பொருட்களைப் பயன் படுத்தி, சுற்றுச் சூழலைப் பாதுகாப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்தப் பேரணி அமைந்திருந்தது*
காசிமேடு அருகே சிறுமி மர்மமான முறையில் உயிரிழந்ததால் ஆத்திரமடைந்த உறவினர்கள் சாலைமறியல்
*🔹🔸சென்னை காசிமேடு பகுதியை சேர்ந்த 9 வயது சிறுமி மர்மமான முறையில் உயிரிழந்ததால் ஆத்திரமடைந்த உறவினர்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.*
*🔹🔸சென்னை காசிமேடு சிங்காரவேலர் நகரைச் சேர்ந்த பிரகாஷ் என்பவரின் 9 வயது மகள் ஜெசிகா நேற்று மாலை வீட்டருகே விளையாடி கொண்டிருந்தார். இந்நிலையில் நீண்ட நேரமாகியும் அவர் வீட்டிற்கு வராததால் உறவினர்கள் அவளை தேடும் பணியில் ஈடுபட்டனர்.*
*🔹🔸இதற்கிடையில் இரவு 8 மணி அளவில் ஜெசிகாவின் உடல் காசிமேடு கடற்கரையில் கண்டெடுக்கப்பட்டது. ஜெசிகாவைக் காணவில்லை என புகார் அளித்ததாகவும், ஆனால், அவர்கள் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை எனவும் உறவினர்கள் குற்றம் சாட்டினர்.*
*🔹🔸போலீசார் நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்தும், மரணத்திற்கு காரணமானவர்களைக் கைது செய்யக்கோரியும் உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.தகவல் அறிந்து வந்த காவல்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, சம்பவம் தொடர்பாக தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்*
டெல்லி: தமிழகத்தில் நெல் நேரடி கொள்முதல் நிலையங்கள் செய்யப்படும் காலம் 30.09.2018 வரை தமிழக அரசு நீட்டிப்பு செய்தது. 31.08.2018 உடன் நேரடி கொள்முதல் நிலையங்கள் செயல்படும் காலம் நிறைவடைந்த நிலையில் மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு செய்யப்பட்டது. தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று நேரடி கொள்முதல் நிலையங்களுக்கான கால அவகாசத்தை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டது.
சென்னை: தொழில்நுட்ப கோளாறு காரணமாக முடங்கிய மெட்ரோ ரயில் சேவை 15 நிமிடங்களுக்கு பிறகு துவங்கியது. சென்னை எழும்பூரில் ஒரு மெட்ரோ ரயிலின் தானியங்கி கதவு திறக்காததால் மற்ற மெட்ரோ ரயில்களும் நிறுத்தப்பட்டது.
கோவை: கோவையில் பல்வேறு சாலை மேம்பாட்டு பணிகளால் விபத்துகள் குறைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார். 50 ஆண்டுகாலத்தில் கோவைக்கு இல்லாத வளர்ச்சியை இந்த ஆட்சி செய்துள்ளதாக அமைச்சர் வேலுமணி தெரிவித்தார்.
சென்னை: ஐஸ் ஹவுஸ் நடேசன் சாலையில் உள்ள கடையில் இருந்து கட்டுக்கட்டாக குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. கடை உரிமையாளர் சாகுல் ஹமீதை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை: 10-ம் தேதி நடைபெறும் நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்திற்கு வெள்ளையன் ஆதரவு தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த வணிகர் சங்க பேரவைத் தலைவர் வெள்ளையன் தெரிவித்தார். செப்.10ம் தேதி மாலை 4 மணிக்கு கடைகள் திறக்கப்படும் என வெள்ளையன் அறிவித்துள்ளார்.
நேபாளம்: நேபாளத்தில் 7 பேருடன் சென்ற சிறிய ரக விமானம் அடர்ந்த காட்டுக்குள் விழுந்து நொறுங்கியது. விமானத்தில் பயணித்த 7 பேரின் நிலை பற்றி தகவல் கிடைக்கவில்லை. நேபாளத்தில் சத்யாவதி அடர்ந்த காட்டுக்குள் விழுந்த விமானத்தை தேடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நுவாக்கோடு, தாதிங் எல்லை அருகே ரேடாரின் தொடர்பிலிருந்து விமானம் விலகியது.
சென்னை: சென்னையில் இருந்து இலங்கை சென்ற நபரிடம் 3.20 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரூ.2.08 கோடி பதிப்பிலான 31 தங்க கட்டிகளை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்துவது இந்தியாவின் கையில் இல்லை : அமைச்சர் தர்மேந்திர பிரதான்
டெல்லி: பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்துவது இந்தியாவின் கையில் இல்லை என மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார். கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள், உற்பத்தியை குறைக்கும் போது விலையேற்றத்தை கட்டுப்படுத்த முடியாது.
திருச்சி: முக்கொம்பு மேலணையில் தற்காலிக பாலத்தில் இருந்து கசிவடையும் நீரை தடுக்கும் பணிகள் தொடங்கியுள்ளது. மணல் உள்ளிட்டவைகளை கொண்டு தற்காலிக பாலத்தின் நீர் கசிவை அடைத்து வருகின்றனர்.
தேனி: தேனி, திண்டுக்கலில் கூலித்தொழிலாளர்கள் பெயரில் கடன் மோசடி வழக்கு தொடரப்பட்டது. விருதுநகர் கலைச்செல்வி என்பவர் வீட்டில் அமலக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். காப்பீடு பெற்றுத்தருவதாக கூறி 147 தொழிலாளர்கள் பெயரில் மோசடி செய்ததாக புகார் எழுந்துள்ளது.
சென்னை: செப்டம்பர் 10-ம் தேதி நடைபெறும் முழு அடைப்புப் போராட்டத்துக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் ஆதரவு தெரிவித்துள்ளார். பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
நெல்லை: அம்பாசமுத்திரம் அருகேயுள்ள வேலாயுதநகர் நகராட்சி குப்பை கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குப்பை கிடங்கில் பரவிவரும் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.
*போட்ட மறுநாளே பெயர்ந்து போகும் அவலம்*
நாகர்கோவில் : குமரி மாவட்டத்தில் ஒரு வார மழைக்கே தாக்கு பிடிக்காமல் சாலைகள் காணாமல் போயுள்ளன. நாகர்கோவில் நகரம் உள்பட குமரி மாவட்டம் முழுவதும் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் நிதி ஒதுக்கீட்டில், தேசிய நெடுஞ்சாைலகள் முதல், மாநில நெடுஞ்சாலை, மாவட்ட சாலைகள் மற்றும் கிராமப்புற சாலைகள் கடந்த இரு ஆண்டுகளில் படிப்படியாக போடப்பட்டுள்ளன. ஆனால் தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்ட போதே அவை தரமற்ற முறையில் அமைக்கப்படுவதாக புகார்கள் எழுந்தன.
இதனையடுத்து தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வும் செய்து சோதனைக்காக மாதிரிகள் சேகரித்து சென்றனர். இதுபோல் மத்திய சாலைப்போக்குவரத்து அமைச்சராக பொன்.ராதாகிருஷ்ணன் இருந்த போதும், அவரது நேர்முக உதவியாளர் தலைமையிலான ஐஏஎஸ் அதிகாரியே நேரில் ஆய்வு நடத்தினார். இதில் பறக்கை சுசீந்திரம் சாலை மிகவும் தரமற்றதாக போடப்பட்டதை கண்டறிந்து அந்த சாலையை மீண்டும் புதியதாக சீரமைக்க உத்தரவிட்டார். அப்போது தேசிய நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்கள், குத்தகை தாரருக்கு ஆதரவாக இருந்ததையும் கண்டறிந்து எச்சரிக்கை செய்தார்.
மேலும் அனைத்து சாலைகளையும் ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவித்தார். ஆனால் அதன்பின்னர் ஆய்வு எதுவும் நடைபெற வில்லை. மேலும் ஏற்கனவே நடைபெற்ற ஆய்வுகள், மாதிரிகள் சேகரிப்பு என்ன ஆனது என்பது பற்றியும் இதுவரை எவ்வித தகவலும் இல்லை. இந்நிலையில், வெள்ளமடம் முதல், நாகர்கோவில் வரை உள்ள தேசிய நெடுஞ்சாலை மிகவும் குண்டும் குழியுமாக காணப்படுகிறது.
தேசிய நெடுஞ்சாலை என்பதால், இருசக்கர வாகனங்கள் முதல் அனைத்து வாகனங்களும் வேகமாக வருகின்றன. இந்த வாகனங்கள் இச்சாலையில் உள்ள திடீர் பள்ளங்களில் விழுந்து விபத்துகள் ஏற்பட்டு உயிர்பலி ஏற்படவும் காரணமாகின்றன. ஹெல்மெட் விசயத்தில், கரார் காட்டும், அரசு ஏனோ இதுபோன்ற ஆபத்தான சாலைகளை சரிசெய்ய ஆர்வம் காட்டுவதில்லை. இந்நிலையில் கடந்த மாதம் பெய்த மழையில் குமரியில் பெரும்பாலான சாலைகள் காணாமல் போய்விட்டன.
தாழக்குடி முதல் அவ்வையாரம்மன் கோயில் வரையிலான சாலை போடப்பட்டு, ஒரு மாதம் கூட ஆகவில்லை. தற்போது, அந்த சாலையில் பெரிய பெரிய பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. இதுபோல் ஈசாந்திமங்கலம் முதல் ஆண்டித்தோப்பு வரையிலான சாலை ஏற்கனவே குண்டும் குழியுமாக இருந்தது, தற்போது இந்த சாலையும் சுமார் அரை கி.மீ தொலைவிற்கு சாலை என்ற ஒன்று இருப்பது தெரியாமல், ஏதோ வயல் வரப்பு போன்று காணப்படுகிறது. இத்தனைக்கும் இந்த சாலை வழியாக ஏராளமான வாகனங்கள் 24 மணி நேரமும் சென்று வருகின்றன.
இதுபோல் நெடுமங்காடு சாலையில் துவரன்காடு முதல் ஆரல்வாய்மொழி வரை உள்ள சாலையிலும் பல இடங்களில் சாலையை துண்டித்து பள்ளங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த பள்ளங்கள் தற்போதைய மழையால் மேலும் சேதமடைந்து காணப்படுகின்றன. நீண்ட நெடிய போராட்டத்திற்கு பின்னர், துவரன்காடு முதல் சீதப்பால் வரை இச்சாலை சீரமைக்கப்பட்டாலும், போட்ட மறுநாளே போதுமான தார் இன்றி சாலை பெயர்ந்ததை அதிகாரிகளிடம் அப்பகுதி மக்களே அள்ளி காண்பித்து புகார் செய்தனர்.
இத்தனைக்கும் தற்போது திருவனந்தபுரம் - திருநெல்வேலி மார்க்கத்தில், நாகர்கோவில் நகருக்கள் வராமல் செல்லும் புறவழிச்சாலையாக உள்ளதால், 24 மணி நேரமும் கார்கள், சுற்றுலா வாகனங்கள் மட்டுமின்றி கன்டெய்னர், டாரஸ் லாரிகள் போன்றவையும் செல்லும் மாவட்டத்தின் பிரதான சாலையாக நெடுமங்காடு சாலை உள்ளது. எனவே இந்த சாலையை தரமாக அமைக்க கோரிக்கை எழுந்துள்ளது.
இத்தனைக்கும் தற்போது திருவனந்தபுரம் - திருநெல்வேலி மார்க்கத்தில், நாகர்கோவில் நகருக்கள் வராமல் செல்லும் புறவழிச்சாலையாக உள்ளதால், 24 மணி நேரமும் கார்கள், சுற்றுலா வாகனங்கள் மட்டுமின்றி கன்டெய்னர், டாரஸ் லாரிகள் போன்றவையும் செல்லும் மாவட்டத்தின் பிரதான சாலையாக நெடுமங்காடு சாலை உள்ளது. எனவே இந்த சாலையை தரமாக அமைக்க கோரிக்கை எழுந்துள்ளது.
கிராமப்புற சாலைகள் மோசம் என்றால், மாவட்ட தலைநகரான நாகர்கோவிலில் அவ்வை சண்முகம் சாலையில் மணியடிச்சான் கோயில் சந்திப்பு முதல் சட்ட மன்ற உறுப்பினர் அலுவலகம் வரை சாலை என்பதே காணவில்லை. பாதாள சாக்கடை பணிகள் இங்கு 6 ஆண்டுகளாக நடைபெறுவதால், ஏற்பட்ட பள்ளங்களால், கார்கள், இருசக்கர வாகனங்கள் மட்டுமின்றி, நடந்து செல்லக் கூட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதுபோல் பாலமோர் சாலையிலும், பாதாள சாக்கடை மேன்ஹோல் பகுதிகளில் மீண்டும் ராட்சத பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் இருசக்கர வாகனங்கள் இந்த பள்ளங்களில் தடுமாறி கீழே விழுந்து விபத்து மற்றும் உயிர்ப்பலி ஏற்படும் நிலை உள்ளது. மிகவும் குறுகலான சாலையான அசம்பு ரோட்டிலும், தற்போது பெய்த மழையால் பெரிய ராசிங்கன் தெரு சந்திப்பு அருகே தனியார் தொலைபேசிக்கான மேன்ஹோல் உடைந்து, வாகன ஓட்டிகளை மிரட்டி வருகிறது.
இதுபோல் காதரீன் பூத் மருத்துவமனை அருகே சாலை சீரமைக்கப்பட்ட சில நாட்களில் பாலத்தின் மேற்கு பகுதியில் ஓட்டை விழுந்து, பெரிய பள்ளம் ஏற்பட்டது. பல மாதங்கள் ஆகியும், இந்த பள்ளம் முறையாக மூடப்படாமல் உள்ளது. தறபோது மழையால் மீண்டும், பாலத்தில் ஏற்கனவே பள்ளம் விழுந்த இடத்தில் மூடுவதற்கு போடப்பட்ட மணல் அரித்து பள்ளம் ஏற்பட்டுள்ளது. இறச்சகுளம் முதல் புத்தேரி வரை அமைக்கப்பட்ட புதிய சாலையும் தற்போதைய மழையால் செல்லரித்து காணப்படுகிறது. தற்போது, திருவனந்தபுரத்திலிருந்து வரும் பஸ்கள் அனைத்தும், இச்சாலை வழியாகவே நாகர்கோவில் வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
பொதுவாக மழைக்காலம் என்றில்லாமல், தற்போது சாலை அமைத்த ஒரு சில நாட்களிலேயே பெயர்ந்து வருகின்றன. அதுவும் தற்போது பெய்தமழையால், தரமற்ற முறையில் அமைக்கப்பட்ட பல சாலைகள் காணமல் போய்விட்டன. அமைச்சர்கள், ஆளும் கட்சி நிர்வாகிகள், மக்கள் பிரதிநிதிகள், அதிகாரிகள் என குத்தகைதார்கள் பணத்தை தண்ணீராக செலவழிக்க வேண்டி இருப்பதால், தற்போது, திட்ட மதிப்பீட்டில் 35 சதவீதம் மட்டுமே பணிகள் செய்யப்படுவதே காரணம் என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே மாவட்ட கலெக்டர் நாகர்கோவில் உள்பட அனைத்து பகுதிகளிலும் சாலைகளை ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ள கோரிக்கை எழுந்துள்ளது.
*மரத்தடியில் பாடம் நடத்தினர்*
*பாப்பாக்குடி அருகே பரபரப்பு*
பாப்பாக்குடி : அரசு பள்ளியில் சத்துணவு மையம் மூடப்பட்டதால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்து பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மரத்தடியில் அவர்களே பாடம் எடுத்து வருகின்றனர். நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே மானாபரநல்லூர் காமராஜ் காலனி பகுதியில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுமார் 20 குழந்தைகள் படித்து வருகின்றனர். கடந்த 20 ஆண்டுகளாக இப்பள்ளியிலேயே குழந்தைகளுக்கு சத்துணவு தயாரித்து கொடுக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக சத்துணவு தயார் செய்வது நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் இங்கிருந்த அரிசி, பருப்பு, எண்ணெய், முட்டை போன்ற அனைத்து பொருட்களும் 2.5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கிரியம்மாள்புரத்தில் உள்ள பள்ளிக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கிருந்து மதிய சத்துணவு தயாரித்து எடுத்து வரப்படுவதாக தெரிகிறது.
இதனால் காலதாமதம் ஏற்படுவதால் பள்ளி குழந்தைகள் வீடுகளில் இருந்து உணவுகளை கொண்டு வந்து சாப்பிட்டனர். இந்த பள்ளியிலேயே மீண்டும் சத்துணவு தயாரித்து குறிப்பிட்ட நேரத்திற்கு வழங்க வேண்டுமென பெற்றோர் கோரிக்கை விடுத்தனர். இதுதொடர்பாக வட்டார வளர்ச்சி அலுவலர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.
இதையடுத்து கிராம மக்கள், தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்குள்ள மரத்தடியில் குழந்தைகளை அமர வைத்து அவர்களே பாடம் நடத்தினர்.
இதனிடையே மதியம் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) பேச்சியம்மாள், சேரன்மகாதேவி தாசில்தார் சொர்ணம், பாப்பாக்குடி பிடிஓக்கள் செல்வகுமார், சங்கரலிங்கம் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். சம்பந்தப்பட்ட உயரதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாகவும், தற்போது சத்துணவு எடுத்து வரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். ஆனால் இதையேற்க மறுத்த மக்கள், இந்த பள்ளியில் சத்துணவு மையம் துவங்கும் வரை எங்களது போராட்டம் தொடரும், என்றனர். இதனால் அதிகாரிகள் திரும்பிச் சென்றனர்.
தொடர்ந்து மாலை 3 மணியளவில் மீண்டும் பேச்சுவார்தை வந்தனர். அப்போதும் சத்துணவு மையம் மீண்டும் செயல்படும் என உறுதியளிக்கும்படி வலியுறுத்தினர். பின்னர் கோரிக்கையை வலியுறுத்தி கலெக்டரின் நேர்முக உதவியாளரிடம் மனு அளித்தனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், கடந்த 20 ஆண்டுகளாக இந்த பள்ளியிலேயே மதிய உணவு தயாரித்து வழங்கப்பட்டது. தற்போது அரசாணை இல்லாமல் அதிகாரிகள் சிலரது அதிகார துஷ்பிரயோகத்தால் சத்துணவு மையம் மூடப்பட்டு சுமார் 3 கிமீ தொலைவில் உள்ள பள்ளியில் இருந்து சத்துணவு தயாரித்து எடுத்து வரப்படுகிறது.
இதனால் காலதாமதம் ஆகிறது. சத்துணவும் சுகாதாரமான முறையில் இல்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தலையிட்டு இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். அதுவரை எங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம். இன்றும், நாளையும் பள்ளி விடுமுறை என்பதால், திங்கட்கிழமை முதல் மீண்டும் போராட்டத்தை தொடருவோம் என்றனர்.
*நேபாளத்தில் 7 பேருடன் சென்ற சிறிய ரக விமானம் அடர்ந்த காட்டுக்குள் விழுந்து நொறுங்கியது. விமானத்தில் பயணித்த 7 பேரின் நிலை பற்றி தகவல் கிடைக்கவில்லை. நேபாளத்தில் சத்யாவதி அடர்ந்த காட்டுக்குள் விழுந்த விமானத்தை தேடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நுவாக்கோடு, தாதிங் எல்லை அருகே ரேடாரின் தொடர்பிலிருந்து விமானம் விலகியது.*
*சென்னையில் இருந்து இலங்கை சென்ற நபரிடம் 3.20 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரூ.2.08 கோடி பதிப்பிலான 31 தங்க கட்டிகளை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.*
*நேபாளத்தில் ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கியதில் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த பயணி உட்பட 6பேர் பலி*
*ஹெலிகாப்டரில் 7பேர் பயணம் செய்த நிலையில் பெண் பயணி ஒருவர் மட்டும் உயிருடன் மீட்பு*
*பரங்கிமலை ரயில் நிலையத்தில் 5 பேர் ரயிலில் இருந்து தவறி விழுந்தது குறித்து 3 மணி நேரம் விசாரணை நடந்தது. டி.எஸ்.பி.ரவி தலைமையில் நடந்த விசாரணையில் ரயிலை இயக்கிய ஓட்டுநர் மற்றும் கார்டு உள்ளிட்டோரிடம் விளக்கம் கேட்கப்பட்டது.கடந்த ஜூலை 24-ம் தேதி ரயில் நிலைய தடுப்பு சுவரில் மோதி 5 பேர் பலியானது நினைவிருக்கலாம்.*
*வேலூர் கல்லப்பாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் +2 படிக்கும் மாணவன் டீச்சருக்கு ஐ லவ் யூ சொன்ன சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல், டீச்சர் மற்றும் மாணவிகளை செல்ஃபோனில் ஆபாசமாக படம்பிடித்த மாணவன் அதை அவ்வப்போது பார்த்து பார்த்து ரசித்ததும் தெரியவந்துள்ளது. மாணவனுக்கு எதுபோன்ற தண்டனை வழங்குவது என கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.*
சில்மிஷம் செய்த ஆசிரியர் ... நீதிபதி விசாரணை
*காஞ்சிபுரம் மாவட்டம் வடமணிப்பாக்கம் உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் பாலியல் தொந்தரவு அளித்ததாக நீதிபதியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் பாக்யராஜ் மீது பாதிக்கப்பட்ட மாணவியின் தாய் குழந்தைகள் நல பாதுகாப்பு நீதிமன்றத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து பாதிக்கப்பட்ட மாணவியிடம் நீதிபதி மீனாட்சி விசாரணை செய்து வருகிறார்.*
இந்துமதி பருப்பு நிறுவன உரிமையாளர்களின் வீடு, தனியார் நிறுவனம் ரூ.90 கோடி மோசடி*
வங்கியில் போலி ஆவணங்களை காட்டி கடன் பெற்று மோசடி செய்திருப்பதாக தொடரப்பட்ட வழக்கில் சோதனை....*
வங்கியில் போலி ஆவணங்களை காட்டி கடன் பெற்று மோசடி செய்திருப்பதாக தொடரப்பட்ட வழக்கில் சோதனை....*
எஸ்பிஐ வங்கியில் போலி ஆவணங்கள் மூலம் விருதுநகரை சேர்ந்த தனியார் நிறுவனம் ரூ.90 கோடி மோசடி*
சென்னை, மதுரை, கோவை மற்றும் விருதுநகரில் உள்ள தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான 9 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை*
நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று பெரும்பான்மை பலத்துடன் பாஜக மீண்டும் ஆட்சியமைக்கும் - அமித்ஷா*
அதிகப் பெரும்பணக்காரர்கள் வாழும் நகரங்களின் தரவரிசையில் ஹாங்காங் முதலிடம்*
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையம் : அக்டோபர் 24ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வாய்ப்பு*
சீனாவும், இந்தியாவும் வளர அமெரிக்கா ஏன் மானியம் அளிக்க வேண்டும்? இனி நிதியுதவி இல்லை.. அதிபர் ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு*
ராஜஸ்தானில் இளம்பெண்ணிற்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞருக்கு தர்ம அடி*
*ராஜஸ்தான் மாநிலம் தவுசாவில், பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.*
ஹர்திக் படேலுடன் ராசா சந்திப்பு*
*இடஒதுக்கீடு, விவசாய கடனை தள்ளுபடி செய்ய கோரி உண்ணாவிரதம் இருக்கும் ஹர்திக் படேலை முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா இன்று சந்தித்தார். அகமதாபாத்தில் உள்ள மருத்துவமனையில் சந்தித்து உண்ணாவிரத்தை கைவிடுமாறு வேண்டுகோள் விடுத்தார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி ஹர்திக் படேலை ஆ.ராசா சந்தித்தது குறிப்பிடத்தக்கது.*
*8 வழிச்சாலை குறித்து கருத்து கேட்க வந்த யோகேந்திர யாதவ் தி.மலை மாவட்டம் செங்கம் அருகே கைது செய்யப்பட்டார். இந்நிலையில், யோகேந்திர யாதவ் கைதுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், "ஜனநாயக போராட்டத்திற்கு அனுமதி மறுக்கும் சகிப்புத்தன்மையற்ற அதிமுக அரசு அதற்கான பலனை பெறும்" என்று தெரிவித்துள்ளார்*
*விவசாயிகளை சந்திக்க சென்ற யோகேந்திர யாதவ் உட்பட 5 பேரை செங்கம் அருகே போலீஸ் தடுத்து நிறுத்தி கைது செய்துள்ளது. காலையில் கைது செய்யப்பட்ட யோகேந்திர யாதவ் மாலையில் விடுவிக்கப்பட்டார். விவசாயிகளை சந்திக்க விடாமல் தடுக்கும் போலீசுடன் யோகேந்திர யாதவ் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ளார். 8 வழிச்சாலையால் பாதிக்கும் விவசாயிகளின் கருத்தை கேட்க யாதவ் திருவண்ணாமலை வந்துள்ளார். சமூக ஆர்வலர் யாதவ் டெல்லியிலிருந்து 50 பேர் குழுவுடன் தமிழகம் வந்துள்ளார்.*
*ஜப்பானில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்திற்கு பலியானவர்களின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 6ம் தேதி ஹொக்கைடோ தீவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 5 பேரை பற்றிய தகவல் கிடைக்கவில்லை. 600 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அட்சுமா நகரில் தான் உயிரழந்தோர் அதிகம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மீட்பு பணியில் 40 ஆயிரம் பேர் ஈடுபட்டுள்ளனர்.*
திருச்சி: ஸ்ரீரங்கம் மேலூர் வண்ணத்துப்பூச்சி பூங்கா 8 நாட்களுக்கு பிறகு நாளை மீண்டும் திறக்கப்படவுள்ளது. கொள்ளிடம் கதவணை பாலம் உடைந்ததை தொடர்ந்து சீரமைப்பு பணியால் 8 நாட்களாக பூங்கா மூடப்பட்டிருந்தது.
ஆனைமலை புலிகள் காப்பகத்தில் இருந்து வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு யானை மாற்றம்_*
பொள்ளாச்சி: ஆனைமலை புலிகள் காப்பகத்தில் இருந்து வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு ரோகிணி என்ற பெண் யானை புதிதாக கொண்டு வரப்பட்டுள்ளது. நாளை முதல் வண்டலூர் உயிரியல் பூங்காவில் ரோகிணி யானையை பார்வையாளர்கள் காணலாம் என பூங்கா நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
போலீஸ் தடுத்தாலும் விவசாயிகளை சந்திப்பேன் : சமூக ஆர்வலர் யோகேந்திர யாதவ் உறுதி_*
தி.மலை: போலீஸ் தடுத்தாலும் விவசாயிகளை சந்திப்பேன் என்று சமூக ஆர்வலர் யோகேந்திர யாதவ் தெரிவித்துள்ளார். 8 வழிச்சாலை திட்டத்தால் பாதிக்கும் விவசாயிகளை சந்திக்க வந்த யோகேந்திர யாதவ் கைது செய்யப்பட்டுள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே யோகேந்திர யாதவ் கைது செய்யப்பட்டார். 2 நாட்கள் முன்பு அனுமதி பெற்று தர்ணா ஊர்வலம் நடத்த வேண்டும் என்று DSP உத்தரவிட்டுள்ளார். விவசாயிகளை அவர்களது வீட்டில்தான் சந்திக்கப் போகிறேன் என்று யோகேந்திர யாதவ் விளக்கமளித்துள்ளார். உண்மை நிலை அறியவே டெல்லியிலிருந்து தமது குழு திருவண்ணாமலைக்கு வந்துள்ளது என்றும் யோகேந்திர யாதவ் தெரிவித்துள்ளார். தம்மை தடுக்கும் நோக்கில் திட்டமிட்டு போலீஸ் முன்தேதியிட்டு உத்தரவு பிறப்பித்ததாக குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை: வரையறுக்கப்பட்டதை விட அதிக ஊனம் உள்ளதாக கூறி மாணவிக்கு இடம் வழங்க மறுக்கப்பட்ட ஆணை ரத்து செய்யப்பட்டது. நடப்பு கல்வியாண்டில் விழுப்புரத்தை சேர்ந்த மாணவி நந்தினிக்கு நீட் தேர்வை நிர்பந்திக்காமல் மாணவர் சேர்க்கை வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
தவுசா: ராஜஸ்தான் மாநிலம் தவுசாவில், பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தி.மலை: விவசாயிகளை சந்திக்க சென்ற யோகேந்திர யாதவ் உட்பட 5 பேரை செங்கம் அருகே போலீஸ் தடுத்து நிறுத்தி கைது செய்துள்ளது. காலையில் கைது செய்யப்பட்ட யோகேந்திர யாதவ் மாலையில் விடுவிக்கப்பட்டார். விவசாயிகளை சந்திக்க விடாமல் தடுக்கும் போலீசுடன் யோகேந்திர யாதவ் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ளார். 8 வழிச்சாலையால் பாதிக்கும் விவசாயிகளின் கருத்தை கேட்க யாதவ் திருவண்ணாமலை வந்துள்ளார். சமூக ஆர்வலர் யாதவ் டெல்லியிலிருந்து 50 பேர் குழுவுடன் தமிழகம் வந்துள்ளார்.
ஜப்பான் நிலநடுக்க பலி 35 ஆக உயர்வு_*
டோக்கியோ: ஜப்பானில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்திற்கு பலியானவர்களின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 6ம் தேதி ஹொக்கைடோ தீவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 5 பேரை பற்றிய தகவல் கிடைக்கவில்லை. 600 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அட்சுமா நகரில் தான் உயிரழந்தோர் அதிகம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மீட்பு பணியில் 40 ஆயிரம் பேர் ஈடுபட்டுள்ளனர்.
ராகிங்கில் ஈடுபட்டு தண்டனை பெற்றால் கல்வி சான்றிதழில் தண்டனை விவரம் குறிப்பிடப்படும்" என்று உயர்கல்வி துறை அமைச்சர் அன்பழகன் அறிவித்துள்ளார். மேலும், ராகிங்கை தடுக்க கல்லூரிகளில் சிசிடிவி கேமரா பொருத்தவும், ராகிங் கண்காணிப்புக்குழு இல்லாத கல்லூரிகளில் குழு அமைக்கவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
செப்டம்பர் 10-ம் தேதி நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்துக்கு தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். 10-க்கும் மேற்பட்ட போக்குவரத்து தொழிற்சங்கங்கள் முழு அடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். பல தொழிற்சங்கங்கள் பந்த்-ல் பங்கேற்பதால் பெரும்பாலான பேருந்துகள் இயங்கவாய்ப்பில்லை என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Breaking News | Modi | Petrol Price | Roopa IPS | Tamil Nadu | CBI Raid | => NEWS PACKAGE
Reviewed by Tamilnadu At One Stop
on
September 09, 2018
Rating:
No comments: