Click Here For Amazon Today's Exclusive Deals
*_🌴🐯🇮🇳🕊🌴கொல்லிமலை சோளக்காட்டில் தொலைநோக்கி இல்லம் திறக்கப்படுமா?_*
சேந்தமங்கலம், : நாமக்கல் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமான கொல்லிமலைக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், அண்டை மாநிலங்களிலிருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். விடுமுறை நாட்களில் குடும்பத்தினரோடு குவியும் சுற்றுலா பயணிகள், ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, நம்ம அருவி, மாசிலா அருவி, அறப்பளீஸ்வரர் கோயில், சீக்குப்பாறை வியூ பாய்ண்ட், தாவரவியல் பூங்கா உள்ளிட்ட பல்வேறு இடங்களை சுற்றிப்பார்ப்பது வழக்கமாக உள்ளது. அடிவார பகுதியான காரவள்ளியிலிருந்து 70 கொண்டை ஊசி வளைவுகளை கடந்து சென்றவுடன் முதல் சுற்றுலாப் பகுதியாக சோளக்காடு அமைகிறது.
இங்கு ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட கட்டிடம் தான் தற்போது நெடுஞ்சாலைத்துறை பயணியர் மாளிகையாக உள்ளது. இதன் அருகில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மூலம் தொலைநோக்கி இல்லம் செயல்பட்டு வந்தது. கடந்த சில வருடங்களாக தொலைநோக்கி இல்லம் மூடப்பட்டுள்ளது. இதனை முறைப்படி திறந்த பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறு சுற்றுலா பயணிகள் பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த தொலைநோக்கி இல்லத்தில் உள்ள லென்ஸ் கருவி மூலம் தரைவழிப்பகுதியான சேந்தமங்கலம், காளப்பநாயக்கன்பட்டி, நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளை துல்லியமாக காணலாம்.
-----------------------------------------------------------------
SocialMedia Virals Channel for More recent Viral Videos in Category following Funny, Innovative Videos, Kerala Floods 2018 Videos and lot More..
இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த முன்னாள் திமுக எம்எல்ஏ பொன்னுசாமி கூறுகையில், திமுக ஆட்சி காலத்தில் கொல்லிமலையில் பல்வேறு திட்டங்கள் சுற்றுலா பயணிகள் நலனுக்காக கொண்டுவரப்பட்டது. தொலைநோக்கி இல்லம் சுமார் ₹3 லட்சம் மதிப்பில் பராமரிக்கப்பட்டு புதிய கருவிகள் பொருத்தப்பட்டது. ஆனால், அதிலிருந்த லென்ஸ்கள் எங்கே போனது என தெரியவில்லை. பல வருடங்களாக தொலைநோக்கி இல்லம் மூடியே கிடக்கிறது. கொல்லிமலையில் உயர்ந்த சிகரமான சோளக்காட்டில் உள்ள இந்த தொலைநோக்கி இல்லம் மூலம் தரைவழிப்பகுதியில் நடப்பதைகளை பார்வையிடலாம் என்றார். எனவே, மாவட்ட நிர்வாகம் சுற்றுலா பயணிகள் வசதிக்காக தொலைநோக்கி இல்லத்தை பராமரித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
*♨2100 ஏக்கரில், 2420 கோடி ரூபாய் மதிப்பீட்டில், கிருஷ்ணகிரியில் சிறப்பு முதலீட்டு மண்டலம்♨*
🔹🔹கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி சிறப்பு முதலீட்டு மண்டலம் அமைக்கும் பணியை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் அடிக்கல் நாட்டித் தொடங்கி வைத்தார்.
🔹🔹சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் எம்.சி.சம்பத், பாலகிருஷ்ணா ரெட்டி மற்றும் தலைமைச் செயலாளர் கிரிஜாவைத்தியநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இரண்டாயிரத்து 420 கோடி ரூபாய் மதிப்பீட்டில், உருவாகும் கிருஷ்ணகிரி சிறப்பு முதலீட்டு மண்டலம், இரண்டாயிரத்து 100 ஏக்கர் நிலப்பரப்பில் அமைய உள்ளது.
🔹🔹உலகத்தரமான நவீன அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளுடன் உருவாக்கப்பட உள்ள இந்த சிறப்பு மண்டலத்தின் மூலம், 5 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முதலீடுகள் ஈர்க்கப்படுவதுடன், 60 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கிட வழிவகுக்கப்படும் என தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
🔹🔹தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தில் நேரடியாக நியமனம் செய்யப்பட்ட 37 முதுநிலை அலுவலர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பணிநியமன ஆணைகளை வழங்கினார்
*♨கீழணை மீது அமைந்துள்ள அணைக்கரை பாலத்தில் கனரக ஊர்திகள் போக்குவரத்தை தடை செய்ய வேண்டும் - ராமதாஸ்♨*
🔹🔹கீழணை அமைந்துள்ள தஞ்சை மாவட்ட அணைக்கரை பாலத்தில் கனரக ஊர்திகள் போக்குவரத்தை தடை செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
🔹🔹கொள்ளிடம் தொடங்கும் இடத்தில் 1836-ஆம் ஆண்டு மேலணையை கட்டிய ஆர்தர் காட்டன் என்ற அதிகாரி, 1940-ஆம் ஆண்டில் தஞ்சை மாவட்டம் அணைக்கரையில் கீழணையைக் கட்டியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தஞ்சை, நாகை, கடலூர் மாவட்டங்களில் 1.32 லட்சம் ஏக்கர் நிலங்களுக்கு பாசன ஆதாரமாக திகழும் இந்த அணை, முறையான பராமரிப்பு இல்லாமல் கடந்த 2002-ஆம் ஆண்டு வலுவிழந்ததாகவும் அவர் கூறியுள்ளார். கீழணையில் 5 முதல் 18 வரையிலான 14 நீர்வழி மதகுகள் சேதமடைந்துள்ளன என்றும், பாலத்தில் தொடர்ந்து போக்குவரத்து அனுமதிக்கப்பட்டால் அதற்கு எந்த நேரமும் ஆபத்து நேரலாம் என்றும் ராமதாஸ் எச்சரித்துள்ளார்.
🔹🔹அணைக்கரையிலிருந்து கும்பகோணம் செல்லும் ஊர்திகளை மதனத்தூர் - நீலத்தநல்லூர் கொள்ளிடம் பாலம் வழியாக இயக்குவதன் மூலம் கீழணையில் வாகனப் போக்குவரத்தை தவிர்க்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். விக்கிரவாண்டியிலிருந்து கும்பகோணம் வழியாக தஞ்சை செல்லும் இருவழிச் சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்றும் திட்டத்தை விரைந்து செயல்படுத்துவதன் மூலம் இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண முடியும் என்றும் ராமதாஸ் கூறியுள்ளார்
♨தமிழகம், புதுவை கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு♨*
🔹🔹தமிழகம், புதுவையில் கடலோர மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
🔹🔹தென்கிழக்கு தமிழகம் மற்றும் வட மேற்கு வங்க கடலில் மேலடுக்கு சுழற்சிகள் காரணமாக தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
🔹🔹மேலும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகம், புதுவையின் ஓரிரு இடங்களில் மிதமானது முதல் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
🔹🔹சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மாலை அல்லது இரவில் லேசானது முதல் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருபுவனத்தில் 8 சென்டிமீட்டரும், கரூரில் 7 சென்டிமீட்டரும் மழை பதிவாகியுள்ளது
*♨சென்னை பள்ளிகரணை பகுதியில் பெண்களிடம் வழிப்பறி செய்த இருவர் கைது♨*
🔹🔹சென்னை பள்ளிகரணை பகுதியில் பெண்களிடம் வழிப்பறியில் ஈடுப்பட்ட இருவரைக் கைது செய்த போலீசார், 20 சவரன் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.
🔹🔹பள்ளிகரணை பகுதிகளில் தனியாக நடந்து செல்லும் பெண்களைக் குறிவைத்து, ஒரு கும்பல் வழிப்பறி மற்றும் செயிண் பறிப்பு சம்வங்கள் ஈடுபட்டு வந்தது. இதையடுத்து தீவிர வாகன சோதனையில் ஈடுப்பட்ட போலீசார், வேளச்சேரி - தாம்பரம் சாலையில் சந்தேகத்திற்கிடமான வகையில் வந்த இருவரை மடக்கி விசாரணை செய்தனர்.
🔹🔹பிடிபட்டவர்கள் கடலூரைச் சேர்ந்த கௌதம் மற்றும் பிரபு என்பதும் தொடர்ந்து வழிப்பறியில் ஈடுப்பட்டதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடமிருந்து 20 சவரன் தங்க நகைகள், இருச்சக்கர வாகனம், கத்தி ஆகியவற்றை பறிமுதல் செய்து, இருவரையும் புழல் சிறையில் அடைத்தனர்
♨பேரழிவு கண்ட கேரளாவில் இன்று களையிழந்தது ஓணம் பண்டிகை♨*
🔹🔹வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவில் இன்று ஓணம் பண்டிகை வழக்கமான உற்சாகம் இல்லாமல் கொண்டாடப்பட்டு வருகிறது.
🔹🔹வெள்ளத்தால் பேரழிவைச் சந்தித்துள்ள கேரளாவில், பல கோவில்களில் மக்கள் கூட்டம் குறைந்து காணப்பட்டது. குறிப்பாக திருவனந்தபுரத்தில் உள்ள ஆற்றுக்கால் பகவதி அம்மன் அம்பலத்திலும், பத்மநாபசுவாமி ஆலயத்திலும் பக்தர்கள் வருகை வழக்கத்தை விட மிகவும் குறைந்து காணப்பட்டது.
🔹🔹கொச்சினில் ஓணத்துக்கான புத்தாடைகள், உணவுப் பொருட்கள் வாங்கும் சந்தையும் களையிழந்தது. திருவனந்தபுரத்தில் தன்னார்வலர்கள் இணைந்து ஓணம் பரிசுப் பொருள் தொகுப்பாக அரிசி உள்ளிட்டவற்றை நிவாரண முகாம்களுக்கு அனுப்பி வைத்தனர
*♨தமிழகத்தின் கோவையைச் சேர்ந்த ஒருவருக்கு தேசிய நல்லாசிரியர் விருது♨*
🔹🔹மத்திய அரசின் சார்பில் வழங்கப்படும் தேசிய நல்லாசிரியர் விருது, நடப்பாண்டில் தமிழகத்தின் கோவையைச் சேர்ந்த ஒருவருக்கு மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது.
🔹🔹ஆண்டுதோறும் சிறப்பாக செயல்படும் ஆசிரியர்களுக்கு, மத்திய அரசு சார்பில் தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு தமிழகத்தைச் சேர்ந்த 22 பேருக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்பட்ட நிலையில், நடப்பாண்டில் ஒரே ஒரு ஆசிரியர் பெயர் மட்டுமே பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
🔹🔹நடப்பாண்டில் நல்லாசிரியர் விருதுக்கு தமிழகத்தில் இருந்து 6 பேர் பரிந்துரைக்கப்பட்ட நிலையில், கோவையைச் சேர்ந்த ஸதி ((Sathy)) என்பவருக்கு மட்டுமே நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது
*♨அமித்ஷா வருவது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வரவில்லை - தமிழிசை♨*
🔹🔹வருகிற 30ம் தேதி நடைபெறவுள்ள கலைஞரின் நினைவேந்தல் நிகழ்ச்சியில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா கலந்து கொள்வது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமான தகவல் வரவில்லை என பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கூறியுள்ளார்.
🔹🔹திருவண்ணாமலைக்கு கொண்டு வரப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் அஸ்தி ரத ஊர்வலத்தில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்திய பின் பேசிய அவர், இதனை தெரிவித்தார்
*♨சேலத்தில் சூரியனை சுற்றி தோன்றிய ஒளிவட்டத்தினை பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டுரசித்தனர்♨*
🔹🔹சேலத்தில் சூரியனை சுற்றி தோன்றிய ஒளிவட்டத்தினை பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டுரசித்தனர்.
🔹🔹இன்று காலை சேலம் நகரில் கடும் வெயில் கொளுத்தி வந்த நிலையில், நண்பகலில் வெப்பம் குறைந்து சூரியனை சுற்றி ஒளிவட்டம் ஏற்பட்டது. சேலம் நகர் மட்டுமல்லாது நகரைச் சுற்றியுள்ள பல்வேறு இடங்களிலும் இந்த ஒளி வட்டம் தெரிந்தது.
🔹🔹இதுகுறித்து வானியல் ஆய்வாளர்களிடம் கேட்டபோது, வழக்கமான இயற்கை நிகழ்வுதான் என்றனர். இதனை சோலார் ஹாலோ எனப்படும் வளிமண்டல ஒளிச்சிதறல் நிகழ்வு என்றும் அவர்கள் தெரிவித்தனர்
*♨மணிரத்னம் இயக்கத்தில் செக்கச் சிவந்த வானம் படத்தின் டிரைலர் வெளியாகியது♨*
🔹🔹மணிரத்னம் இயக்கத்தில் அரவிந்த்சாமி, சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய் ஆகியோர் நடித்துள்ள செக்கச் சிவந்த வானம் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
🔹🔹ஜோதிகா, அதிதி ராவ், ஐஸ்வர்யா ராஜேஷ், பிரகாஷ் ராஜ், தியாகராஜன் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படத்தில் அரவிந்த் சாமி, சிம்பு, அருண் விஜய் ஆகியோர் சகோதரர்களாக நடித்துள்ளனர். ரசூல் என்ற போலீஸ் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதியும் நடித்துள்ளார்.
🔹🔹ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது
அண்ணா, கலைஞர் வளர்த்த திமுகவில் சேர திமுகவின் கதவை தட்டுவதில் தவறில்லை- மதுரையில் ஆலோசனைக்கு பிறகு மு.க.அழகிரி பேட்டி.*
*மு.க.ஸ்டாலின் செயல் தலைவரான பின் திமுக எத்தனை தேர்தலில் வெற்றி பெற்றது?*
*செயல்படாத தலைவராகத் தான் ஸ்டாலின் உள்ளார், என்னை சேர்க்காவிட்டால் அதே நிலைமை தான் நீடிக்கும்.*
*திமுக தலைவர் கருணாநிதி இருந்தபோதே கட்சி பதவிக்கு ஆசைப்படாத நான் இப்போதா ஆசைப்பட போகிறேன்?*
*செப்டம்பர் 5 பேரணிக்கு பிறகு தமிழக மக்கள் என்னை எப்படி ஏற்றுக்கொள்கிறார்கள் என தெரியும்.*
*அவசர அவசரமாக திமுக தலைவர் பதவியை ஏற்க செல்கிறார் மு.க.ஸ்டாலின் : மு.க.அழகிரி.*
[25/08 4:12 pm] +91 96290 50885: *மதியம் 2 மணிவரை பல்வேறு மாவட்டங்களில் நடந்தவை*
*மதுரை மாவட்டம்* மேலூரில் போக்குவரத்து காவல் துறை சார்பில் பொதுமக்கள்லுக்கு விபத்துக்கள் திருட்டு குற்றங்கள் போக்குவரத்து நெரிசல் ஆகியவைகளை கட்டுப்படுத்தும் பொருட்டு பின்பற்றப்பட வேண்டிய நடவடிக்கைகளை பொதுமக்கள் வியாபாரிகளுக்கும் துண்டு பிராச்சாரம் வழங்கப்பட்டது.
*வேலூர்* ஆம்பூர் அருகே மின்னூரில் 5 வயது சிறுவன் படுகொலை செய்யப்பட்டு சாலையோரத்தில் சடலம் வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேசிய நெடுஞ்சாலையில் கோயில் அருகே கிடந்த சிறுவனின் சடலத்தை மீட்டு காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
*சென்னையில்* 13 இடங்களில் கூட்டுறவு சங்கத் தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் செய்யப்படுகிறது. திருவல்லிக்கேணியில் வேட்பு மனு தாக்கலின் போது அதிமுகவின் இருபிரிவனருக்கு இடையே வாக்குவாதம் நடைபெற்றது. அதிமுக எம்.எல்.ஏ.மற்றும் பகுதி செயலாளர் இடையே ஏற்பட்ட மோதலில் வேட்பு மனு கிழிக்கப்பட்டது.
*நீலகிரி:* கோத்தகிரியில் இரும்பு கதவில் தலை சிக்கி உயிருக்கு போராடிய கரடி குட்டியால் பரபரப்பு ஏற்பட்டது. 2 மணி நேர போராட்டத்திற்கு பின் கரடிக்குட்டியை மீட்ட வனத்துறையினர் காட்டில் விட்டனர். மீட்பு போராட்டத்தின் போது தாய் கரடி நெருங்கி வந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.
*சென்னை* அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் ரேகிங் புகார் குறித்து 9 பேர் நபர் குழு விசாரணை நடைபெறுகிறது. 2-ம் ஆண்டு மாணவன் பிரசாத் அளித்த புகாரை தொடர்ந்து விசாரணைக்குழு அமைக்கப்பட்டு உள்ளது
*கடலூர்*
சவுடு மண் என்ற பெயரில் ஆற்று மணல் கடத்திய இந்த 15 லாரிகளையும் சிதம்பரம் தாலுகா காவல் நிலைய போலீஸார் பறிமுதல் செய்தனர்.
_______________________________

- Click Here 👇👇👇 To Subscribe
SocialMedia Virals Channel for More recent Viral Videos in Category following Funny, Innovative Videos, Kerala Floods 2018 Videos and lot More..
-------------------------------------------------------------------

Breaking News 25 August 2018 Tamilnadu | India | Universe | Ajith | Viswasam
Reviewed by Tamilnadu At One Stop
on
August 26, 2018
Rating:
No comments: